கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்து வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட மூவருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசல் சம்பவத்தில் 41 பேர் பலியான விவகாரத்தில் அவதூறு கருத்துகளையும் வதந்திகளையும் பரப்பியதாக 25 பேர் மீது தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதில், பாஜக மாநில நிர்வாகி சகாயம் மற்றும் தவெகவைச் சேர்ந்த சிவனேசன், சரத்குமார் ஆகியோர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மூவரையும் செவ்வாய்க்கிழமை காலை சென்னை நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்திய நிலையில், 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, வதந்தி பரப்பியதாக பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் இன்று அதிகாலை சென்னை மாநகரக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.