கரூர்: “ரூ.10,000 இல் ஒரு ரூபாய் குறைந்தாலும் வேலை நடக்காது” – விவசாயியிடம் லஞ்சம் கேட்ட விஏஓ கைது | Karur VAO arrested for demanding bribe from farmer

Spread the love

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பாப்பையம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை. விவசாயியான இவர் தனது விவசாய நிலத்தை பட்டா பெயர் திருத்தம் செய்வதற்காக விண்ணப்பம் செய்திருந்தார்.

அந்த வகையில், வடவம்பாடி கிராம நிர்வாக அலுவலரான அரவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், பட்டா பெயர் திருத்தம் செய்வதற்காக விவசாயி சின்னதுரையிடம் லஞ்சமாக ரூ. 10,000 கேட்டுள்ளார்.

அதோடு, “அதில் ஒத்த ரூபாய் குறைந்தாலும் வேலை நடக்காது’ என்று கறாரும் காட்டியுள்ளார். ஆனால், பணம் கொடுக்க முன் வராத விவசாயி சின்னத்துரை, இதுகுறித்து கரூர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கிராம நிர்வாக அலுவலர் சிவகுமாரிடம் நேரில் கொடுக்கும் போது மறைந்திருந்த கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் தங்கமணி தலைமையிலான போலீஸார், கிராம நிர்வாக அலுவலர் சிவகுமாரைக் கைது செய்தனர். அதோடு, அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *