கரூர்: விஜய்யின் பிரச்சார வாகனம், ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு | Karur Velayuthampalayam police files case against Vijay’s campaign vehicle

1378755
Spread the love

கரூர்: கரூர் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் விஜய் வாகனம் மற்றும் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 27-ம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக நாமக்கல்லில் இருந்து கரூர் வரும் வழியில் கரூர் மாவட்ட எல்லையான தளவாபாளையம் பகுதியில் விஜய்க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்பொழுது அஜாக்கிரதையாக இருவர் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று கீழே விழுந்தனர். லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

இதையடுத்து கரூர் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் விஜய் வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் வாகனம் மீதும், இருசக்கர வாகனங்கள் ஓட்டிச் சென்ற இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *