கரூர் வெண்ணெய் மலை பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு சீல்: மக்கள் போராட்டம் | Encroaching shops sealed in Karur

Spread the love

Last Updated : 04 Nov, 2025 02:51 PM

Published : 04 Nov 2025 02:51 PM
Last Updated : 04 Nov 2025 02:51 PM

கரூர்: கரூர் வெண்ணெய் மலை பகுதியில் உள்ள பாலசுப்பிரமணியம் கோயில் நிலத்தில், ஆக்கிரமிப்பு கடைகள் சீல் வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர்.

கரூர் வெண்ணெய் மலை பகுதியில் பாலசுப்பிரமணியம் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான 547 ஏக்கர் நிலங்களில் பலர் குடியிருப்புகள் கட்டி வசித்து வந்தனர். இது தொடர்பாக திருத்தொண்டர் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் கடந்த 2019 ஆம் ஆண்டு மதுரை சென்னை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

ஆனால் இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடப்பட்டது. இதையடுத்து, இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இப்பகுதியில் உள்ள கடைகளுக்கு சீல் வைக்கும் பணி, கோயில் நிலங்களில் அறிவிப்பு பலகை வைக்கும் பணி நடந்து வருகிறது.

கடந்த வியாழக்கிழமை அப்பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. இதையடுத்து, இந்து சமய அறநிலைத்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மேலும், இது தொடர்பான வழக்கு மீண்டும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கிறது.

பழைய கரூர்-சேலம் சாலையில் வெண்ணைய் மலைப் பகுதியில் உள்ள 4 கடைகளுக்கு சீல் வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை கண்டித்து அப்பகுதியில் உள்ள மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்பகுதியில் அதிகளவிலான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் பெண் ஒருவர் மயக்கம் அடைந்தார். அவர் மீட்டகப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். போலீஸார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!


நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *