கரூர்: ‘3 பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை!’ – போக்சோ வழக்கில் கைது செய்யப்பட இடியாப்ப வியாபாரி! – Idipayyam seller arrested in pocso case

Spread the love

கரூர் மாவட்டம், தொழிற்பேட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் பக்கீர் முகமது (43 ). இவர், வீட்டில் இருந்தபடியே காலை மற்றும் இரவு நேரங்களில் இடியாப்பம் தயார் செய்து, கரூர் நகரப் பகுதி, காந்திகிராமம், தான்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனம் மூலம் விற்பனை செய்யும் தொழிலை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், வீடுகளில் பள்ளி விடுமுறை நாட்களில், பெற்றோர் வேலைக்கு சென்று விடுவதால் தனியாக உள்ள மூன்று பள்ளிச் சிறுமிகளுக்கு (வயது 12, 10, 7) பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களும் விடுமுறை என்பதால், தனியாக இருந்த சிறுமிகளை வீட்டுக்குள் அழைத்து சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும், பெற்றோர் வீடு திரும்பியவுடன் சிறுமிகள் நடந்தவற்றை அவர்களிடம் கண்ணீர்மல்க கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

பின்னர், பள்ளி சிறுமியின் தந்தை கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் சுமதி விசாரணை மேற்கொண்டார். அவரின் விசாரணையில் பக்கீர் முகமது குற்றத்தை ஒப்புக் கொண்டதால், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், குழந்தைகளுக்கு எதிராக வன்முறை மற்றும் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துதல் போன்ற சம்பவங்கள் இருந்தால்,1098 மற்றும் 8903331098 என்ற இலவச உதவி என்னை தொடர்பு கொண்டு புகார் மற்றும் ஆலோசனையின் பெறலாம் என கரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எஸ்.பி.ப்ரியா பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மூன்று பள்ளி சிறுமிகளுக்கு இடியாப்ப வியாபாரி ஒருவர் பாலியல் தொல்லைக் கொடுத்து கைதாகியுள்ள சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *