பேருந்து தாக்கப்பட்டதையடுத்து, கர்நாடகத்திற்கு செல்லும் அரசுப் பேருந்து சேவையை மகாராஷ்டிரம் நிறுத்தியுள்ளது.
பெங்களூருவில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த மகாராஷ்டிர அரசுப் பேருந்து, கர்நாடகத்தின் சித்ரதுர்காவில் வெள்ளிக்கிழமை இரவு கன்னட ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் அவர்கள் ஓட்டுநரையும் தாக்கியதாக தெரிகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கர்நாடகத்திற்கு செல்லும் மகாரஷ்டிர அரசுப் பேருந்து சேவையை நிறுத்தி வைக்க அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் சனிக்கிழமை உத்தரவிட்டார்.