கர்நாடகத்தில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்!

Dinamani2f2024 072f19598f92 8d38 41c5 B370 773b120927b72fnewindianexpress 2024 07 6270c0a9 8a2d 4ed3 A79a E73f1a67c33c Tnie Import 2023 10 2 Original Dengue .avif.avif
Spread the love

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 42 சதவிகிதம் டெங்கு பரவல் கர்நாடகத்தில் அதிகரித்துள்ளதாக அந்த மாநில சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பெங்களூருவில் மக்களை வீடு வீடாக சென்று சந்திக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனவரி மாதம் முதல் 6 பேர் டெங்குவினால் பலியானதாகவும் 6,187 டெங்கு தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, சிக்கமங்களூரு, மைசூரு, ஹவேரி, சித்ரதுர்கா, சிவமோகா மற்றும் தக்‌ஷினா கன்னடா ஆகிய மாவட்டங்களில் டெங்கு பதிவாகியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *