வனப்பகுதிகளில் வங்கப் புலிகளை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் மாநிலங்களில் ஒன்றாக கர்நாடக மாநிலம் விளங்கி வருகிறது. அதே வேளையில், புலிகளுக்கு விஷம் வைத்து கொல்வது முதல் வாகனங்களில் அடிபட்டு இறப்பது வரை புலிகளின் இயற்கைக்கு மாறான இறப்பு எண்ணிக்கையும் கர்நாடகாவில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் நாஹரோலே புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேறிய பெண் புலி ஒன்று கவுடனகட்டே குடியிருப்புப் பகுதிகளில் எதிர்கொள்ளல்களை ஏற்படுத்தி வந்துள்ளது. உடனடியாக அந்தப் புலியைப் பிடிக்க வலியுறுத்தி வனத்துறையினருக்கு உள்ளூர் மக்கள் கடுமையான அழுத்தம் கொடுத்த நிலையில், வனத்துறையினர் அந்தப் பெண் புலியைக் கடந்த 27- ம் தேதியன்று மயக்க ஊசி செலுத்திப் பிடித்துள்ளனர்.