மத்தியப் பிரதேசத்தில் கர்பா நடனம் ஆடிக்கொண்டிருந்த பெண்ணை துப்பாக்கி முனையில் கடத்திய கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம், மந்த்சௌர் மாவட்டத்தில் சனிக்கிழமை கர்பா நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணை கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது.
இதனைக் கண்ட அங்கிருந்த மற்ற பெண்கள் சிதறி ஓடினர். பெண்ணின் குடும்ப உறுப்பினர்களே அவரை துப்பாக்கி முனையில் கடத்தியதை போலீஸார் கண்டறிந்தனர்.
இதையடுத்து இரண்டு பெண்கள் உள்பட, அந்தப் பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.