

இது தொடர்பாக அந்த சீரியலுடன் தொடர்புடைய சிலருடன் பேசினோம்.”’கலர்ஸ்’ தமிழ் சேனல்ல ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியல் மூலம் தமிழ்த் தொலைக்காட்சி ஏரியாவுக்கு அறிமுகமானவங்கதான் ப்ரீத்தி. பிறகு சன் சன் டிவியில் ‘சித்தி 2’, தொடரில் ‘வெண்பா’ங்கிற கேரக்டர்ல நடிச்சாங்க. இந்தத் தொடரும் இவங்களுக்கு நல்ல பேரைத் தந்தாலும், யாரும் எதிர்பாராத நேரத்துல தொடர் முடிவடைஞ்சுடுச்சு. தொடர்ந்து சன் டி.வியிலேயே பகல் நேரத்துல ஒளிபரப்பான ‘மலர்’ தொடரில் நடிக்க கமிட் ஆனாங்க. இந்த சீரியல் 400 எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகி வர்ற சூழல்ல இப்ப இந்தத் தொடரிலிருந்து வெளியேறியிருக்காங்க” என்கிறார்கள் இவர்கள்.