கர்ப்பம், பாராசிட்டமால், ADHD: ட்ரம்ப் கூற்றை பொய்யென நிரூபித்த Lancet ஆய்வு|Trump wrong? Lancet busts paracetamol–ADHD claim

Spread the love

“கர்ப்பமான பெண்கள் பாராசிட்டமால் சாப்பிடுவது நல்லதல்ல. அவர்கள் அந்த மாத்திரையை எடுத்துக்கொண்டால் குழந்தைகளுக்கு ADHD, ஆட்டிசம் போன்ற நோய்கள் ஏற்படுகிறது’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்பு கூறியிருந்தார்.

காய்ச்சல்… வலி… தலைவலி என எதுவாக இருந்தாலும், பெரும்பாலான மக்கள் பாராசிட்டமால் வாங்கி சாப்பிடுவது வழக்கம்.

ட்ரம்பின் இந்தக் கூற்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இப்போது ட்ரம்பின் பேச்சு பொய்யானது… அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ‘The Lancet’ இதழில் வெளியாகி உள்ள ஆய்வு தற்போது நிரூபித்துள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அந்த இதழில் வெளியாகி உள்ள தகவல்…

“பாராசிட்டமாலை முறையான மதிப்பாய்வு மற்றும் மெட்டா பகுப்பாய்வு செய்ததில் கர்ப்பமான பெண்கள் பாராசிட்டமால் எடுத்துக்கொண்டால் குழந்தைகளுக்கு ADHD, ஆட்டிசம், மனநலக் கோளாறு ஏற்படுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை”

கடந்த ஆண்டு, ட்ரம்ப் இந்தக் கூற்றை கூறியதில் உலகம் முழுவதும்‌ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ட்ரம்பின் கூற்றிற்கு அப்போதே மருத்துவர்கள் மத்தியில் எதிர்ப்புகளைக் கிளப்பியது.

இப்போது மக்களுக்கு இந்த ஆய்வின் மூலம் உண்மை தெளிவாகி உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *