இந்த நிலையில், காலை 6 மணிக்கு ‘கெட் அவுட் ஸ்டாலின்’ டிரெண்டிங்கை தொடங்கிவைத்த அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:
“ஒரு குடும்பத்தின் ஆதிக்கம், கறைபடிந்த அமைச்சரவை, ஊழலின் மையமாக இருப்பது, சட்டவிரோதத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது, தமிழகத்தை போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயத்தின் புகலிடமாக மாற்றுவது, பெருகிவரும் கடன், பாழடைந்த கல்வி அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்தான சூழல், சாதி மற்றும் மத அடிப்படையிலான பிரிவினைவாத அரசியல், நல்லாட்சியை வழங்குவதில் இடைவிடாத தோல்விகள், குறைபாடுள்ள கொள்கைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என அனைத்துக்கும் தமிழகத்தில் உள்ள திமுக தலைமையிலான அரசு விரைவில் மக்களால் தோற்கடிக்கப்படுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலை டிரெண்டிங்கை தொடங்கிவைத்து 3 மணிநேரமாகும் நிலையில், இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமான ட்வீட்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக பதிவிடப்பட்டுள்ளது.