கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் களேபரத்தை உண்டாக்கிய திமுகவினர்! | kalaignar dream house project issue was explained

1353396.jpg
Spread the love

‘குடிசைகள் இல்லா தமிழகம்’ என்ற இலக்கை அடையும் பொருட்டு தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் 2030-க்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்டித்தருவதற்காக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை கடந்த ஆண்டு அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். இந்தத் திட்டத்தில், குடிசை வீடுகளிலும் ஓட்டு வீடுகளிலும் வசிக்கும் எளிய மக்களுக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மானியத்தில் வீடுகள் கட்டித் தரப்படுகின்றன. இதற்காக 2024-25-ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் 1 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஏழைகள், வீடற்​றவர்​கள், குடிசை மற்​றும் ஓட்டு வீடு​களில் வசிப்​பவர்​களுக்கு மட்​டுமே கலைஞரின் கனவு இல்​லம் திட்​டத்​தில் முன்னுரிமை அளிக்​கப்பட வேண்​டும் என அரசு விதி​களை வகுத்​துள்​ளது. இந்​தத் திட்​டத்​திற்​கான பயனாளி​களை சம்​பந்​தப்​பட்ட ஊராட்சி மன்​றத் தலை​வர், ஊராட்சி உதவி பொறி​யாளர்​கள், வட்​டார பொறி​யாளர், வட்​டார வளர்ச்சி அலு​வலர், வார்டு உறுப்பினர்​கள், ஊராட்சி மேற்​பார்​வை​யாளர் ஆகி​யோர் அடங்​கிய குழு தேர்வு செய்​யும்.

இதன்​படி, கள்​ளக்​குறிச்சி மாவட்​டத்​தில் கலைஞர் கனவு இல்​லத் திட்​டத்​தில் 3,300 வீடு​களைக் கட்ட திட்​ட​மிடப்​பட்​டது. இதற்​கான பயனாளி​களை அந்​தந்த வட்​டார வளர்ச்சி அலு​வலர்​கள் தேர்​வுசெய்து பணி ஆணை​களை வழங்கி வந்​தனர். இதில், திரு​நாவலூர் ஊராட்சி ஒன்​றி​யத்​தில் 458 வீடு​கள் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டது.

மணிக்கண்ணன்

இதற்​கான பயனாளி​களை அரசு அறி​வித்​துள்ள விதி​களின் படி தேர்வு செய்ய வேண்​டும் என உளுந்​தூர்​பேட்டை எம்​எல்​ஏ-​வான மணிக்​கண்​ணன் வட்​டார வளர்ச்சி அலு​வலரை (பிடிஓ) அறி​வுறுத்தி இருக்​கி​றார். ஆனால், திமுக ஒன்​றியச் செய​லா​ளர்​களான வசந்​தவேலும், முரு​க​னும் தாங்​கள் சொல்​லும் நபர்​களுக்கே வீடு​களை ஒதுக்க வேண்​டும் என பிடி​வாதம் காட்​டிய​தாகச் சொல்கிறார்​கள்.

இதனால் யார் சொல்​வதைக் கேட்​பது எனத் தெரி​யாமல் குழம்​பிப் போன பிடிஓ-​வான உமா​ராணி, எம்​எல்ஏ சொன்​னபடியே கடந்த 4-ம் தேதி ஊராட்​சித் தலை​வர்​களை அழைத்து பயனாளி​களை தேர்வு செய்ய வலி​யுறுத்​தி​யிருக்​கி​றார்.

இதையறிந்த முரு​கன் மற்​றும் வசந்​தவேல் ஆதர​வாளர்​கள், திமுக கொடிகளோடு வந்து பிடிஓ அலு​வல​கத்தை முற்​றுகை​யிட்டு நாற்​காலிகளை தூக்கி வீசி ரகளை செய்​து​விட்​டுப் போயிருக்​கி​றார்​கள். இதனால், தன்னை வேறெங்​காவது மாற்​றி​விடும்​படி திட்ட அலு​வலரிடம் மன்​றாடிக் கெஞ்​சுமளவுக்​குப் போயிருக்​கி​றார் பிடிஓ.

வசந்தவேல்

இதுகுறித்து திரு​நாவலூர் ஒன்​றிய செய​லா​ளர் வசந்​தவேலிடம் நாம் பேசி​ய​போது, “அதி​முக ஆட்​சி​யில் பசுமை வீடு​கள் திட்​டத்​தில் அதி​முக-​வினருக்கு மட்​டுமே வீடு​களை ஒதுக்​கி​னார்​கள் என்​பது ஊரறிந்த ரகசி​யம். அப்​படி இருக்​கை​யில், ஊராட்சி மன்​றத் தலை​வர் சொல்​றவ​ருக்​குத் தான் வீடு​களை ஒதுக்​கு​வோம்னு கங்​கணம் கட்​டிக்​கிட்டு வேலை செய்​றாங்க. அதனால தான், அரசு வகுத்த தகுதி அடிப்​படை​யில் திமுக-​காரனை பரிசீலனை பண்​ணுங்​கன்னு சொல்லி கட்​சிக்​காரங்க பிடிஓ கிட்ட மனு கொடுத்​துட்டு வந்​தாங்க” என்​றார்.

எம்​எல்​ஏ-​வான மணிக்கண்​ணனோ, “முதல்​வரின் கனவுத் திட்​டம்ங்க இது. அரசு என்ன விதி​களை சொல்லி இருக்கோ அதன்​படி தான் பயனாளி​கள் பட்​டியலை பிடிஓ ரெடி பண்​ணி​யிருக்​காங்க. அவங்கள போய் இப்​படி செய்​ய​லா​மா? அப்​படி​யிருந்​தும் கட்​சிக்​காரங்​களை​யும் விட்​டு​டாதீங்​கன்னு சொல்​லி​யிருக்​கேன். அதை​யும் மீறி சிலர் இப்​படி நடந்​துக்​கிறது வருத்​த​மா இருக்கு. இது இப்​படியே நீடிச்சா தேர்​தலில் நிச்​ச​யம் எதிரொலிக்​கும்.

நானும் இந்த விஷ​யத்தை பொறுப்பு அமைச்​சரின் கவனத்​திற்கு கொண்டு செல்​றதா இருக்​கேன்” என்​றார். ஒன்​றிய திமுக-​வினரிடம் பேசி​ய​போது, “இதில் யாரும் சளைத்​தவர்​கள் இல்​லை. ஒன்​றியச் செய​லா​ளர்​கள் இரு​வ​ரும் பேசவேண்​டிய விதத்​தில் ‘பக்​கு​வ​மாக’ பேசி தாங்​களே ஒரு லிஸ்ட்டை ரெடி பண்ணி வைத்​திருந்​தார்​கள். இதைத் தெரிந்து கொண்ட எம்​எல்ஏ, ஊராட்சி மன்​றத் தலை​வர்​கள் மூலம் ‘தன் பங்​கிற்​கு’ பேசி ஒரு பட்​டியலை தயார் செய்ய வைத்​தார்.

இருந்த போதும் தேர்​தல் நேரத்​தில் தனக்கு சிக்​கல் வரலாம் என்​ப​தால், ‘பய​னாளி​கள் யாரும் பத்​துப் பைசா கூட கொடுக்க வேண்டாம்’ என ஊர் ஊருக்கு தண்​டோரா போடாத குறை​யாகச் சொல்லி வரு​கி​றார் எம்​எல்ஏ. இதனால் உட்​கட்​சிக்​குள்​ளேயே உரசல் ஏற்​பட்டு முற்​றுகை வரைக்​கும் வந்​து​விட்​டது” என்​றார்​கள். மொத்​தத்​தில், முதல்​வரின் கனவு இல்​லம் திட்​டத்தை முன் வைத்து கள்​ளக்​குறிச்சி மாவட்​டத்​தில் திமுக-​வினரே களேபரத்தை உண்​டாக்​கிக் கொண்​டிருக்​கிறார்​கள்​!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *