இதில் ஒரு ஒப்பீடு
2016-2021 ஐந்து ஆண்டுகளில் முந்தைய ஆட்சியில் 1 இலட்சம் வீடுகள் தான் கட்டப்பட்டன. ஆனால் 2024-2026 இரண்டே ஆண்டுகளில் 1,79,850 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு, மேலும் 1 இலட்சத்து 20 ஆயிரத்து 150 வீடுகள் கட்டப்படுகின்றன.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மட்டும் அல்ல!
இலங்கை தமிழர்களுக்கு ரூ.589 கோடி ஒதுக்கீட்டில் 10,045 நிரந்தர வீடுகள் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டு 7,469 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. மேலும் தொடர்ந்து 1 இலட்சத்து 79 ஆயிரத்து 850 வீடுகள் கட்டப்படுகின்றன. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் ரூ.3,058 கோடியில் 2.63 இலட்சம் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. அடுக்குமாடி குடியிருப்புகள் திட்டத்தின்கீழ் ரூ.8,384 கோடியில் 58,211 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு; மேலும் 53,467 வீடுகளின் கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தத் திட்டத்தில் ஒரு ஒப்பீடு

2016-2021 முந்தைய ஆட்சியில் 27,688 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டன. ஆனால், 2021-2026 திராவிட மாடல் ஆட்சியில் 58,211 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசு அறிமுகப்படுத்திய அயோத்திதாச பண்டிதர் குறியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.482 கோடி மதிப்பீட்டில் 5281 உட்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்கள்
2021-2026 திராவிட மாடல் ஆட்சியில் 23.56 இலட்சம் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
பழங்குடியினர் நலம் நாடும் தொல்குடி திட்டத்தில்
ரூ. 221 கோடி மதிப்பீட்டில் 7,674 பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
ஒற்றைச் சாளர முறை திட்டத்தின்கீழ்
24,446 மனைப்பிரிவு விண்ணப்பங்களுக்கும், 2002 கட்டட அனுமதி விண்ணப்பங்களுக்கு திராவிட மாடல் அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆகமொத்தம், திராவிட மாடல் அரசு 2021 முதல் ஐந்து ஆண்டுகளில் ரூ.19,694 கோடியில் ஏழைகளுக்காக 4,29,394 வீடுகளைக் கட்டியுள்ளது.
ரூ.482 கோடியில் ஆதிதிராவிடர் வாழும் பகுதிகளில் 5,281 கட்டமைப்புப் பணிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 23.56 இலட்சம் ஏழைகளின் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இப்படி எல்லாருக்கும் எல்லாம் என்னும் தத்துவத்தின்படி திராவிட மாடல் அரசு ஏழை எளிய நலிந்த சமுதாய மக்களின் அடிப்படைத் தேவைகளை எல்லாம் படிப்படியாக நிறைவேற்றி தமிழ்நாட்டிற்குப் பெருமைகளைச் சேர்க்கிறது!