காலை உணவில் 4 இட்லி, பருப்பு சாம்பார், ஒரு முட்டை, சிறிதளவு தானியங்கள் அல்லது வேக வைத்த காய்கறிகள் அல்லது பழத்துண்டுகள் சிறிதளவு சாப்பிட்டாலே சராசரியாக 500 கலோரிகள் கிடைத்துவிடும்.
மதியத்தில், சாதம், பருப்பு சாம்பார் அல்லது தானியங்களில் செய்த குழம்பு, பொரியல், தயிர் எடுத்துக்கொண்டாலேயே 500 கலோரிகளுக்கு மேல் கிடைத்துவிடும்.
இரவில், 3 – 4 இட்லி அல்லது 3 – 4 சப்பாத்தி அல்லது ஒரு கப் கிச்சடியுடன், பருப்பு சாம்பார் மற்றும் காய்கறிகள் சேர்த்துக் கொள்வதால் 400 – 500 கலோரிகள் கிடைக்கும்.
உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில், டீ அல்லது காபி அல்லது ஜூஸ் அல்லது மோர் மற்றும் குறைவான அளவில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதால் 200 – 300 கலோரிகள் கிடைக்கும்.
இந்த வகையில் தினமும் சராசரியாக 1,600 – 1,700 கலோரிகள் கிடைக்கும். எடை குறைவானவர்கள், இந்த உணவுப் பட்டியலில் குறிப்பிட்டுள்ளதைவிடச் சற்று அதிகமாகவும், எடை அதிகமுள்ளவர்கள் கொஞ்சம் குறைவான அளவிலும் உணவை உட்கொண்டால் போதுமானது.