கல்வி நிதி வழங்குவதில் அரசியல் வேண்டாம்: அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள் | Anbil Mahesh appeals to the central govt no politics in providing education funds

1375056
Spread the love

சென்னை: ‘கல்வி நிதி வழங்​கு​வ​தில் அரசி​யல் செய்ய வேண்​டாம்’ என்று மத்​திய அரசுக்கு தமிழக பள்​ளிக்​கல்வி அமைச்​சர் அன்பில் மகேஸ் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். அரசுப் பள்​ளி​களில் படிக்​கும் மாணவர்​களின் உயர் கல்விக்கு வழி​காட்​டும் வகையில் ‘கல்​லூரி களப்​பயணம்’ என்ற சிறப்பு திட்​டம் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. இத்​திட்​டத்​தின்​கீழ் 12-ம் வகுப்பு படிக்​கும் மாணவர்​கள் அரசு மற்​றும் அரசு உதவி பெறும் கல்​லூரி​களுக்கு அழைத்​துச் செல்​லப்​பட்டு கல்​லூரி​களைப் பார்வையிடுகின்றனர்.

அந்த வகை​யில், நடப்பு கல்வி ஆண்​டுக்​கான ‘கல்​லூரி களப்​பயணம்’ திட்​டத்​தின் தொடக்க விழா சென்னை அண்ணா பல்​கலைக்​கழகத்​தில் நேற்று நடந்​தது. இதில் பள்​ளிக்​கல்வி அமைச்​சர் அன்​பில் மகேஸ், பள்​ளிக்​கல்​வித்​துறை செயலர் சந்​திரமோகன், தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக்​கழக மேலாண் இயக்​குநர் கிராந்தி குமார், அண்ணா பல்​கலைக்​கழக பதி​வாளர் ஜெ.பிர​காஷ், கிண்டி பொறி​யியல் கல்​லூரி டீன் பி.ஹரி​கரன், பள்​ளிக்​கல்வி இயக்​குநர் எஸ்​.கண்​ணப்​பன், தொடக்​கக்​கல்வி இயக்​குநர் பி.ஏ.நரேஷ் உள்​ளிட்​டோர் கலந்​து​ கொண்​டனர்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் அன்​பில் மகேஸ் கூறிய​தாவது: அரசுப் பள்ளி மாணவர்​களுக்கு உயர்​கல்விக்கு வழிகாட்டும் நோக்​கில் ‘கல்​லூரி களப்​பயணம்’ திட்​டம் கொண்​டு​வரப்​பட்​டது. இதன்​மூலம் வெவ்​வேறு கல்​லூரி​களுக்கு அழைத்​துச்​செல்​லப்​படும் மாணவர்​கள் அங்​குள்ள படிப்​பு​கள், வசதி​கள், ஆய்​வகங்​கள் போன்​றவற்றை அறிந்​து​கொள்​வ​தால் அவர்​களுக்கு உயர்​கல்​வி​யில் சேர வேண்​டும் என்ற சிந்​தனை மனதில் உரு​வாகும். இந்த ஆண்டு ஒரு லட்​சத்து 40 ஆயிரம் மாணவர்​கள் கலந்​து​கொள்​கின்​றனர். அவர்​கள் 822 கல்​லூரி​களுக்கு களப்​பயணம் மேற்​கொள்​கின்​றனர்.

ஒவ்​வொரு ஆண்​டும் கல்​லூரி களப்​பயணத்தை ஆய்​வு செய்​த​போது இதில் பங்​கேற்​கும் மாணவர்​களில் 70 சதவீதம் பேர் உயர்​கல்விக்கு செல்​வதைக் கண்​டறிந்​தோம். இது 100 சதவீதத்தை எட்ட வேண்​டும் என்​பது​தான் எங்​களின் இலக்​கு. அரசுப் பள்​ளி​களில் இந்த ஆண்டு புதி​தாக 4 லட்​சம் மாணவர்​கள் சேர்ந்​துள்​ளனர்.

ஒரு அரசு பள்​ளி​யில் வெறும் 4 குழந்​தைகள் படித்​தால்​கூட அந்​தப் பள்ளி தொடர்ந்து இயங்​கும். அரசு லாபநோக்கு பார்ப்​பது கிடை​யாது. கல்வி என்​பது ஒரு சேவை என்று கருதுகிறோம். ஆனால், தனி​யார் பள்​ளி​கள் அப்​படி அல்ல. அவர்​கள் லாபநோக்கு பார்த்​து​தான் பள்​ளி​களை நடத்​து​வார்​கள்.

கட்​டாயக் கல்வி உரிமை சட்​டத்​தில், தனி​யார் பள்​ளி​களில் 25 சதவீத மாணவர் சேர்க்​கைக்​கான கல்வி நிதியை மத்​திய அரசு விடுவிக்​க​வில்​லை. இத்​திட்​டத்​தில் ஆண்​டு​தோறும் ஒரு லட்​சம் மாணவர்​கள் பயன்​பெறுகின்​றனர். கல்வி நிதி வழங்​கு​வ​தில் மத்​திய அரசு அரசி​யல் செய்​யக்​கூ​டாது என்​பதை தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கிறோம். இத்​திட்​டத்​தில் ரூ.600 கோடி நிதி வரவேண்​டி​யுள்​ளது. டெல்​லி​யில் மத்​திய கல்வி அமைச்​சரை இரண்டு மூன்று முறை சந்​தித்​துப் பேசி​யுள்​ளோம்.

இதுதொடர்​பாக உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​துள்​ளோம். விரை​வில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்​பார்க்​கிறோம். நிதி ஒதுக்​கீடு என்​பது நமது உரிமை. தமிழகத்​துக்​கான கல்வி நிதியை மத்​திய அரசு உடனடி​யாக விடுவிக்​கக் கோரி காங்​கிரஸ் எம்​.பி. சசி​காந்த் செந்​தில் தொடர் உண்​ணா​விரதம் இருந்து வரு​கிறார். மத்​திய அரசு இப்​போ​தாவது மனமிரங்கி தமிழகத்​துக்​கான கல்​வியை நிதியை விடுவிக்​க முன்​வரவேண்​டும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *