கள்ளக்குறிச்சியில் ஆற்றில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு: நிதியுதவி அறிவித்த முதல்வர் ஸ்டாலின் | Minor Girl Dead at Kallakurichi: CM Stalin Announced Condolence and Relief

Spread the love

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் பூட்டை கிராமத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்: “கள்ளக்குறிச்சி மாவட்டம் மூப்பனார் தெருவில் வசிப்பவர் பன்னீர்செல்வம் மகள் சவுமியா (வயது 14). கடந்த 10ம் தேதி அன்று மாலை பூட்டை கிராம எல்லையில் இருக்கும் ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வலிப்பு ஏற்பட்டு ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று முதல்வர் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *