“இந்த ரோட்டுல போறதே, இரண்டு மூன்று பஸ்கள் தான்..
எப்பவாது லோடு வாகனம் போகும்.
அதுக்கே இப்படின்னா, என்ன சொல்றது நீங்களே பாருங்க”
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசராம்பட்டு எனும் கிராமத்தில் புதிதாய் போடப்பட்ட தார்சாலையின் நிலையை நம்மை அழைத்து காட்டினார்கள்.
இந்த சாலை விரியூர் ஊராட்சி, அரசராம்பட்டு கிராமத்தில் தொடங்கி மையனூர் கிராமம் வரை 4 கிலோமீட்டர் புதிதாக போட்டுள்ளனர்.
தொடங்கிய இடத்திலிருந்து இருபது, முப்பது மீட்டர் தொலைவிலேயே குண்டும் குழியுமான உள்ளது.

இதைப்பற்றி அங்கு வசிக்கும் கிராமவாசிகளிடம் கேட்கும் போது அவர்களின் பதில்,
“என்னத்தங்க சொல்ல சொல்றீங்க! எவ்வளவு வருது, எவ்வளவு போகுது. எல்லாம் கமிஷன் தாங்க!, தோ! கிட்டதட்ட ஆறு வருசத்துக்கு அப்புறம் இந்த ரோடு இப்பதா போட்டானுவ, முழுசா இரண்டு மாசம் கூட வரல! அதுக்குள்ளவே இப்பபடினா, இனிமே என்ன பாடு படனுமோ! என்னத்த சொல்ல” என்று அவ்வளவு சலிப்பாக தன் வருத்தத்தை அவர் கூறினார்.