கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலி எண்ணிக்கை 60 ஐ தாண்டி உள்ளது. மேலும் 100&க்கும் மேற்பட்டோர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் மற்றும் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அ.தி.மு.க. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ.விசாரணை கேட்டு வருகிறார்கள்.
தேசிய மகளிர் ஆணையம்
இதற்கிடையே கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. விஷ சாராய சம்பவத்தில் 6 பெண்கள் பலியாகி இருப்பதை குறிப்பிட்டுள்ள மகளிர் ஆணையம், அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவினர் இன்று(26&ந்தேதி) காலை கள்ளக்குறிச்சி கருணாபுரம் கிராமத்தில் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3 நாள் சிபிஐ காவல்.. அனுமதி கொடுத்தது டெல்லி நீதிமன்றம்!
மேலும் மாவட்ட கலெக்டரை சந்தித்து குஷ்பு தலைமையிலான குழுவினர் விபரங்களை கேட்டறிந்தனர். போலீஸ்நிலையம் சென்றும் எப்.ஐ.ஆர்.பதிவுகளை சேகரித்தனர். விஷ சாராயம் குடித்து உயிரிழந்த, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.பின்னர் குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-
விஷ சாராயம் குடித்தவர்களில் சிலருக்கு பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச் சாராய உயிரிழப்பில் 62 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த உயிரிழப்புகளுக்கு பதிலளிக்கக் கூடியவர்கள் யார் என்பதை பார்க்க வேண்டும்.
நாளை (ஜூன் 27) அறிக்கை
நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் பல இடங்களில் தவறு நடந்துள்ளது தெரியவந்தது. இங்குள்ள அதிகாரிகள் அது தெரிந்திருந்தும், தெரியாதது போல நடந்துள்ளனர். இதுபற்றி டெல்லி மகளிர் ஆணையத்தில் நாளை (ஜூன் 27) அறிக்கை அளிப்போம்.
சிபிசிஐடி மேற்கொண்டு வரும் விசாரணை தொடர்பாக எங்களுக்கு ஏதும் அறிக்கை தரவில்லை. இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும். சிபிஐ விசாரணைக்கு மாற்றதது ஏன் என்பது தெரியவில்லை.
அதிகாரிகள்தான் குற்றவாளிகள்
இந்த விவகாரத்தில் இங்குள்ள அதிகாரிகள்தான் குற்றவாளிகள். அவர்களுக்கு அனைத்தும் தெரிந்தும், தெரியாதது போல் நடிக்கிறார்கள். அதுதான் மிகப்பெரிய குற்றம்.
கள்ளச்சாராயம் விற்பனை குறித்து காவல் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கையில்லை என்று பாதிக்கப்பட்டோர் கூறினார்கள். இந்த கேள்வியை கேட்க வேண்டிய இடத்தில் கேட்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்: