மெக்சிகோ, கழிவுநீரை ஆற்றில் விடுவது அமெரிக்காவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சான் டியாகோ மேற்பார்வை வாரியத்தின் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
மெக்சிகோ, சுமார் 400 மில்லியன் கேலன் (151.4 கோடி லிட்டர்) கழிவுநீரை டிஜுவானா ஆற்றில் வெளியேற்றத் தயாராகி வருகிறது. ஆனால், கழிவுநீரை ஆற்றில் வெளியேற்றுவதால், இது மெக்சிகோ மட்டுமின்றி, அமெரிக்கர்களுக்கும் நோய்ப் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதுகுறித்து, கலிஃபோர்னியாவின் சான் டியாகோ வாரியத்தின் மேற்பார்வையாளரான ஜிம் தேஸ்மன்ட் கூறுவதாவது, “மெக்சிகோ, கழிவுநீரை ஒரு சுத்திகரிப்பு நிலையத்திற்கு திருப்பிவிடுவதற்குப் பதிலாக, ஆற்றில் விடுகிறது. இறுதியில் அது அமெரிக்காவிலும் கடலிலும்தான் முடிகிறது. டிஜுவானா ஆற்றிலிருந்து வரும் நச்சு ஓட்டம், தெற்கு கலிபோர்னியாவில் ஏராளமான கடற்கரை மூடல்கள் மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்களுக்கு வழிவகுத்துள்ளது.