கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்த 2 தலித் இளைஞர்கள் பலி!

Dinamani2f2024 12 012fpc8ukw5i2fp 389154161.jpg
Spread the love

குஜராத்தில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம்

குஜராத்தில் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள பட்டி தாலுகாவில் ஒப்பந்தப் பணியாளர்களான பட்டியலினப் பிரிவைச் சேர்ந்த சிராக் கனு படடியா (18), ஜெயேஷ் பாரத் படடியா (28) இருவரும் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்ய, எவ்வித பாதுகாப்பு நடவடிக்கையுமின்றி சுமார் 50 அடி ஆழமுள்ள கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கினர்.

இந்த நிலையில், கழிவுநீர்த் தொட்டியில் ஏற்பட்ட நச்சு வாயுவால் சிராக்குக்கும், ஜெயேஷுக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனையறிந்த சக ஊழியர், மேலிருந்து அவர்கள் இருவரையும் மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இருப்பினும், அவர்கள் இருவரும் முன்னரே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க: சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

இந்த நிலையில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்ய மனிதர்களை பணியமர்த்திய குற்றம், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம், பட்டியலினத்தவர் மறுவாழ்வு சட்டத்தின்கீழ் மீறல்கள் பிரிவுகளின்கீழ் பட்டி நாகர்பாலிகா தலைமை அதிகாரி மௌசம் படேல், தூய்மைப்பணி ஆய்வாளர் ஹர்ஷத், ஒப்பந்ததாரர் படேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மேலும், உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் இழப்பீடாக தலா ரூ. 30 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *