கழுத்தில் காயம் எப்படி வந்தது? காதலனிடம் தப்பிக்க கார் ஓட்டுர் மீது பழிபோட்ட மாணவி! என்ன நடந்தது? | A nursing student filed a complaint against a car driver

Spread the love

பெங்களூருவில் கல்லூரி மாணவி ஒருவர், தனது கழுத்தில் இருந்த காயங்களை மறைப்பதற்காக, காதலனிடம் பொய் கூறியதுடன், கார் ஓட்டுநர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் இது முற்றிலும் பொய்யான புகார் என்பது தெரியவந்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த 22 வயதான நர்சிங் மாணவி ஒருவர் பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்த டிசம்பர் 6-ம் தேதி மடிவாலா காவல் நிலையத்தில் ஒரு புகாரை அளிக்கிறார்.

அதில், “டிசம்பர் 2ஆம் தேதி இரவு சர் எம். விஸ்வேஸ்வரய்யா முனையத்திற்கு அருகே, கார் ஓட்டுநர் ஒருவரும் அவரது நண்பர்கள் சிலரும் சேர்ந்து என்னை காருக்குள் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்” என்று புகார் அளிக்கிறார்.

இந்த புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து,பெங்களூருவில் வசிக்கும் 33 வயதான கார் ஓட்டுநரை கைது செய்கின்றனர். இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான அந்த ஓட்டுநர், குற்றம் செய்யவில்லை என மறுக்கிறார்.

வழக்கை விசாரித்த போலீஸார் சம்பவம் நடந்ததாக கூறப்படும் ரயில் நிலையப் பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் போலீஸாருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

டிசம்பர் 2-ம் தேதி இரவு 11:30 மணி முதல் மறுநாள் காலை 5:30 மணி வரை, அந்த மாணவியும் கார் ஓட்டுநரும் ரயில் நிலையத்தில் ஒன்றாகச் சுற்றித் திரிந்தது பதிவாகியிருந்தது. மாணவி குறிப்பிட்டது போல எந்தவொரு “கும்பலும்’ அங்கு வரவில்லை. மாறாக இருவரும் இணக்கமாகப் பேசிச் சிரித்தபடியே காரில் ஏறுவதும், இறங்குவதும் காட்சிகளில் இருந்திருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *