நடிகர் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவான சொர்கவாசல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
ஆர்ஜேவாக இருந்து நடிகராக மாறியவர் ஆர்ஜே பாலாஜி. நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் இருக்கிறார். நயன்தாராவை வைத்து இயக்கிய மூக்குத்தி அம்மன் வெற்றி பெற்றது. அடுத்ததாக, நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை இயக்க உள்ளார்.
இதையும் படிக்க: நாக சைதன்யா – சோபிதா திருமண சடங்குகள் துவக்கம்!
இதற்கிடையே, அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் சொர்கவாசல் என்கிற படத்தில் நடித்திருந்தார். மத்திய சிறைச்சாலையை மையமாக வைத்து 1999-ல் நடக்கும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
இதில், செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல், எழுத்தாளர் சோஷா சக்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில், சொர்கவாசல் படத்தின் டீசரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.