கவிஞர் வைரமுத்துவிற்கு ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
1972இல் “வைகறை மேகங்கள்’ என்ற முதல் கவிதை நூலை எழுதிய வைரமுத்து கவிதைகள், நாவல்கள் உள்ளிட்ட 40 நூல்களை எழுதியிருக்கிறார்.
அதுமட்டுமின்றி சினிமாவில் கிட்டத்தட்ட 7500 பாடல்கள் எழுதியிருக்கிறார்.

‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ படைப்புக்கு சாகித்ய அகாடமி விருதையும், இந்தியாவின் உயர்ந்த இலக்கியப் பரிசுகளுள் ஒன்றான சாதனா சம்மான் விருதையும் மற்றும் இலக்கியப் பங்களிப்புக்காக இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ – பத்மபூஷண் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.