288 பேரவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரத்தில் வருகிற நவம்பர் 20 ஆம் தேதி ஒரேகட்டமாக பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23 நடைபெறவுள்ளது. மகாராஷ்டிரத்தில் மகா விகாஸ் அகாடி கூட்டணி தொகுதிப் பங்கீடு ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, காங்கிரஸ், சிவசேனை (யுபிடி), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) ஆகிய 3 கட்சிகளும் தலா 85 இடங்களில் போட்டியிடும் என்றும் மீதமுள்ள 23 இடங்களில் அந்தந்த கட்சி வேட்பாளர்கள் பட்டியலின் அடிப்படையில் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.