“காங்கிரஸ் கட்சிக்குள் “ராகுல் அணி’ மற்றும் ‘பிரியங்கா அணி’ இடையே நிலவும் மோதல்கள் தற்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது” என சாடியிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி!
ஒடிசாவைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் முகமது மொக்குயிம், `ட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை நீக்கக் கோரி, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதமே இதற்கு காரணம்.
அந்த கடிதத்தில், பிரியங்கா காந்தி வதேரா உட்பட இளைய தலைவர்களுக்குக் கட்சியில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா, எக்ஸ் சமூக வலைதளத்தில்,
“காங்கிரஸ் கட்சியின் உட்கட்சிப் பூசல் அம்பலமாகியுள்ளது! பிரியங்கா அணிக்கும், ராகுல் அணிக்கும் இடையேயான மோதல் இப்போது வெளிப்படையாகத் தெரிகிறது.
ஒடிசாவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியுள்ளார்: ‘கார்கேவை நீக்குங்கள், பிரியங்காவைக் கொண்டு வாருங்கள்’ என்று வலியுறுத்தியுள்ளார்; மாநில மற்றும் மத்தியத் தலைமைக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார்.
83 வயதான மல்லிகார்ஜுன கார்கேயின் தலைமையின் கீழ், காங்கிரஸ் இந்திய இளைஞர்களுடன் இணைய முடியாமல் போனதால், காங்கிரஸ் தலைமைக்கும் இந்திய இளைஞர்களுக்கும் இடையேயான ஒரு ‘ஆழமான மற்றும் வளர்ந்து வரும் துண்டிப்பு’ நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்” என்று விமர்சித்துள்ளார்.