ஜனநாயகன் – மக்களுக்கு தெரியும்
ஜனநாயகன் ஏன் ரிலீஸ் ஆகவில்லைனு மக்களுக்கு தெரியும். தெருவில் செல்லும் ஒரு பெண்ணிடம் கேட்டால் சொல்வார். கரூரில் என்ன நடந்ததுனு மக்கள் சொல்கிறார்கள். நான் சொன்னால் விஜயின் அப்பா என்பதால் சொல்கிறார் என்பார்கள். ஐந்து வருடத்திற்கு முன் இருந்த மக்கள் இப்போது இல்லை. விஜய் அரசியலுக்கு வந்த பிறகு இளைஞர்கள், வயதான பெண்கள் கூட அரசியல் பேச ஆரம்பித்து விட்டனர். ரூ.3,000 கொடுத்தாலும் 5,000 கொடுத்தாலும் ஓட்டு அங்கேதான் போடுவோம் என்கிறார்கள் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
பணத்தால் மக்களை விலைக்கு வாங்கலாம் என நினைக்கின்றனர்… அது நடக்காது. கட்சி ஆரம்பித்து போராட வரும் விஜய்க்கு எவ்வளவு எதிர்ப்புகள் இருந்தாலும் பயம் இல்லை. எனக்கும் எந்த பயமும் கிடையாது. என்னுடைய ரத்தம் விஜய்க்கும் பயம் கிடையாது.
காங்கிரஸ் கட்சிக்கு என ஒரு சரித்திரம், வரலாறு இருக்கிறது. சுதந்திரத்திற்காக போராடிய காங்கிரஸ் கட்சி தற்போது தேய்ந்து போயிருக்கிறது. ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுத்து கொடுத்து தேய்ந்து விட்டனர். அந்த பவரை விஜய் கொடுக்கிறேன் என்கிறார். காங்கிரஸ் அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்றார்.