இதன்பிறகே தனித்து போட்டியிடலாம் என்று விஜய் முடிவெடுத்தார். இந்த முடிவை தெரிந்த அன்று இரவே கொளத்துாரில் நடந்த கூட்டத்தில், “எங்களிடம் பா.ஜ.க பேரம் பேசியது. நாங்கள் மதவாத சக்திகளுடன் கூட்டணி வைக்கமாட்டோம்” என்று போட்டுடைத்தார் ஆதவ்.
மற்றொரு தள்ளிப்போய் கொண்டே இருந்த த.வெ.க-வின் இஃப்தார் நிகழ்ச்சியை உடனடியாக நடத்த முடிவெடுத்தனர். அந்த கூட்டத்தில் வைத்து தங்கள் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்த த.வெ.க முடிவெடுத்தது. ஜான் மற்றும் ஆதவ் தரப்பு கச்சதமாக காய்நகர்த்தி விஜய் பேச்சை வடிவமைத்தனர். இவர்கள் கருத்தை விஜய் உள்வாங்கிய பிறகே, தே.ஜ.கூட்டணிக்கு நோ சொன்னார் விஜய்.

அவர்களின் மூவ் படியே, “நாம் அரசியலுக்கு வந்ததில் இருந்து சில வதந்திகள் சொல்லப்படுகிறது. அந்த டீம், இந்த டீம் என சொன்னார்கள், ஆனால் மக்களின் டீம் என எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. அந்த செய்தியையெல்லாம் கேட்டு நீங்கள் குழப்பம் அடைந்திருப்பீர்கள். நான் மீண்டும் தெளிவாக சொல்கிறேன். நான், நாங்கள் எப்போதும் மதசார்பற்ற கொள்கை என்பதிலோ, மதசார்பற்ற சமூக நீதி என்ற நிலைப்பாட்டிலோ சமரசம் வைத்துக் கொள்ள மாட்டோம். நமது தலைமையில்தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
நமது முதல் மாநாட்டில் யாருக்காகவும் எதற்காகவும் எந்தவிதமான சமரசமும் வைத்துக்கொள்ள போவதில்லை என சொல்லியிருந்தேன். அதே நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். எனவே யார் எது சொன்னாலும் நம்பாதீர்கள். எல்லாம் வல்ல இறைவனில் அருளால் நாம் நினைத்ததை நிச்சயம் அடைய முடியும்” என்று பேசி கூட்டணி கணக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
இந்த கடுப்பில் தான் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “நாங்கள் த.வெ.க-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையே நடத்தவில்லை. ஆதவ் அர்ஜூனா யார் என்றே எனக்கு தெரியாது” என்றெல்லாம் கடுப்பான கருத்தையும் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கைகூடாவிட்டாலும் பரவாயில்லை, பா.ஜ.கவுடன் கூட்டணி சேர்ந்துவிடக் கூடாது என த.வெ.க வில் இருவர் கூட்டணியாக செயல்பட்ட ஆதவ்- ஜான் அணி அதில் வெற்றியும் பெற்றுவிட்டனர். இதனால், பா.ஜ.க தரப்பு இந்த இருவர் மீது கடும் டென்சனில் இருக்கிறதாம்.!