அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர் சந்திப்பில், “எங்களுடைய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரும், எதிர்க்
கட்சி தலைவரும் எல்லோரையும் அழைத்து கருத்துக்களை கேட்டிருக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், காரிய கமிட்டி உறுப்பினர்கள், மேனாள் மாநில தலைவர்கள், மேனாள் சட்டமன்ற கட்சி தலைவர்கள் தங்கள் கருத்தை சொல்லியிருக்கிறார்கள்.
பொதுவெளியில் கூட்டணியை பற்றி பேச வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள். ட்வீட் போடுவது, அறிக்கை கொடுப்பது எனக் கூட்டணிக் குறித்து யாரும் பேசக்கூடாது என மிகவும் வேதனையோடு தெரிவித்தார்கள். எனவே, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி என்ன முடிவெடுக்கிறதோ அந்த முடிவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பின்பற்றும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.