காங்கிரஸ் திவாலாகி விட்டது: ஜெ.பி. நட்டா

Dinamani2f2025 03 062fmb9jwzes2fglxor Vxqaajolx.jpg
Spread the love

காங்கிரஸ் கட்சி கொள்கை ரீதியாக திவாலாகி விட்டதாக பாஜக ஜெ.பி. நட்டா கூறினார்.

இமாசலப் பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா பேசியதாவது, “மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரின் கொள்கைகளை காங்கிரஸ் கட்சி பின்பற்றுகிறதா? சுதந்திரப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்தவர்களின் நற்பெயரைக் காப்பாற்ற காங்கிரஸ் கட்சியால் முடியுமா?

காங்கிரஸ் கட்சி, கொள்கை ரீதியாக திவாலாகி விட்டது. காங்கிரஸ் கட்சி, தற்போது தேசியக் கட்சியாகவோ கொள்கை ரீதியான கட்சியாகவோ இல்லை. சகோதரர்கள், சகோதரிகளின் கட்சியைப்போல மாறிவிட்டது.

இதையும் படிக்க: ஒடிசா: பள்ளிகளைக் காவிமயமாக்கும் பாஜக அரசு!

பேரிடர் காலத்தில், இமாசலப் பிரதேச மக்களின் துயரைப் போக்க காங்கிரஸ் முற்படவில்லை. நானும் அனுராக் தாக்கூர் மற்றும் ஜெய்ராம் தாக்கூரும்தான் வந்து ஆயிரம் கோடி மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்கினோம்.

உலக மக்கள் அனைவரும் இந்தியப் பொருளாதாரத்தை புகழ்கின்றனர். ஆனால், இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை குறித்து மட்டுமே காங்கிரஸ் பேசி வருகிறது. அவர்கள் வேலையை இழந்ததால், வேலைவாய்ப்பின்மை குறித்து மட்டுமே பேசுகின்றனர்.

உலகின் 5 ஆவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் இந்தியா, 3 ஆவது இடத்தை நோக்கி நகர்வது குறித்து காங்கிரஸுக்கு எடுத்துரைக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *