ஹமாஸ் அமைப்பின் மூத்த தளபதிகளின் கமாண்ட் போஸ்ட்களாகப் பயன்படுத்தப்பட்ட அறைகளையும் இஸ்ரேல் ராணுவம் கண்டறிந்துள்ளது. இதில், கடந்த மே மாதம் ஹமாஸ் தலைவர் முகமது சின்வாருடன் கொல்லப்பட்ட முகமது ஷபானா பயன்படுத்திய அறையும் அடங்கும்.
காசா போரின் தற்போதைய நிலை
அக்டோபர் 2023-ல் தொடங்கிய காஸா போரின் சமீபத்திய தகவல்கள் இவை: வியாழக்கிழமை காஸா ஸ்டிரிப்பின் தெற்குப் பகுதியில் உள்ள கான் யூனிஸில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர், 18 பேர் காயமடைந்தனர்.
கான் யூனிஸுக்குக் கிழக்கே உள்ள பானி சுஹைலா நகரத்தில் ஒரு வீட்டின் மீது நடந்த தாக்குதலில், ஒரு குழந்தை, பெண் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், 15 பேர் காயமடைந்ததாகவும், அருகில் உள்ள அபஸ்ஸான் நகரத்தில் நடந்த மற்றொரு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மூன்று பேர் காயமடைந்ததாகவும் மருத்துவ ஊழியர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
சுமார் ஆறு வாரங்களாக நீடித்து வரும் போர் நிறுத்தத்தை ஹமாஸும் இஸ்ரேலும் ஒருவரையொருவர் மீறியதாகக் குற்றம் சாட்டியதை அடுத்து இந்த வான்வழித் தாக்குதல்கள் நடந்துள்ளன.