காஞ்சிபுரம் டிஎஸ்பியை சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவு ரத்து: விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தல் | Order to imprison Kanchipuram DSP revoked

1375993
Spread the love

சென்னை: வன்​கொடுமை தடுப்பு சட்ட வழக்​கில் நடவடிக்கை எடுக்​க​வில்லை எனக்​கூறி, காஞ்​சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்ய காஞ்​சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை ரத்து செய்​துள்ள உயர் நீதி​மன்​றம், இந்த விவ​காரம் குறித்து விசா​ரணை நடத்தி அறிக்கை தாக்​கல் செய்ய உயர் நீ்​தி​மன்ற விஜிலென்ஸ் பதி​வாள​ருக்கு உத்​தர​விட்​டுள்​ளது.

காஞ்​சிபுரம் மாவட்​டம் வாலாஜா​பாத் அருகே பூசி​வாக்​கத்​தைச் சேர்ந்த சிவக்​கு​மார் அப்​பகு​தி​யில் பேக்​கரி நடத்தி வரு​கிறார். இக்​கடை​யில் கடந்த ஜூலை மாதம் கேக் வாங்கி சாப்​பிட்ட அதே பகு​தி​யைச் சேர்ந்த பட்​டியலின வகுப்​பைச் சேர்ந்த முரு​கன் என்​பவருக்​கும், கடை உரிமை​யாள​ரான சிவக்​கு​மாருக்​குமிடையே தகராறு ஏற்​பட்​டுள்​ளது.

இதையடுத்​து, சிவக்​கு​மாரின் மரு​மக​னான காஞ்​சிபுரம் மாவட்ட நீதிப​தி​யின் பாது​காப்பு காவல​ராக ஏற்​க​னவே பணி​யாற்​றிய லோகேஷ் (32), முரு​க​னிடம் தகராறில் ஈடு​பட்​டுள்​ளார். அதையடுத்​து, முரு​க​னின் மனைவி பார்​வதி அளித்த புகாரின் பேரில், சிவக்​கு​மார், லோகேஷ் உள்​ளிட்ட 4 பேர் மீது வாலாஜா​பாத் போலீ​ஸார் வன்​கொடுமை தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்​தனர்.

ஆனால், அவர்​கள் மீது போலீ​ஸார் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்லை எனக்​கூறி இந்த வழக்கை விசா​ரித்த காஞ்​சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி செம்​மல், வழக்​கின் விசா​ரணை அதி​காரி​யான காஞ்​சிபுரம் டிஎஸ்பி சங்​கர் கணேஷை கைது செய்​து, 15 நாள் நீதி​மன்ற காவலில் சிறை​யில் அடைக்க நேற்று முன்​தினம் உத்​தர​விட்​டார்.

இந்த உத்​தரவை எதிர்த்​து, காஞ்​சிபுரம் எஸ்​பி, டிஎஸ்பி மற்​றும் வாலாஜா​பாத் காவல் ஆய்​வாளர் ஆகியோர் தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனு மீதான விசா​ரணை நீதிபதி என். சதீ்ஷ்கு​மார் முன்​பாக நேற்று நடந்​தது. அப்​போது, காஞ்​சிபுரம் எஸ்பி உள்​ளிட்​டோர் தரப்​பி்ல் ஆஜரான கூடு​தல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் கே.எம்​.டி.​முகிலன், “மாவட்ட நீதிப​தி​யான செம்​மலுக்​கும், அவரது பாது​காப்பு காவல​ராக பணி​யாற்​றிய லோகேஷூக்​கும் இடையே ஏற்​க​னவே முன்​விரோதம் இருந்​துள்​ளது.

அதன் காரண​மாக லோகேஷ் தற்​போது செங்​கல்​பட்டு மாவட்​டத்​துக்கு மாற்​றப்​பட்டு விட்​டார். உண்​மை​யில், லோகேஷ் மற்​றும் அவரது மாம​னார் சிவக்​கு​மாருக்கு எதி​ராக வன்​கொடுமை தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் அளிக்​கப்​பட்ட புகார் இருதரப்​பும் சமரச​மான​தால் முடித்து வைக்​கப்​பட்​டு​விட்​டது.

ஆனால், மாவட்ட நீதிப​தி​யின் அழுத்​தம் காரண​மாகவே மீண்​டும் அவர்​கள் மீது எஃப்​ஐஆர் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. கடந்த செப்.4 அன்று லோகேஷ் மற்​றும் அவரது மாம​னாரை ஊரை​விட்டு ஒதுக்கி வைத்து மாவட்ட நீதிபதி உத்​தர​விட்​டுள்​ளார்.

அதன்​பிறகு, அவர்​களை இன்​னும் ஏன் கைது செய்​ய​வில்லை எனக் கூறி, வழக்​கின் விசா​ரணை அதி​காரி​யான காஞ்​சிபுரம் டிஎஸ்பி சங்​கர் கணேஷை நீதிபதி செம்​மல் கைது செய்து நீதி​மன்ற காவலில் சிறை​யில் அடைக்க உத்​தர​விட்​டுள்​ளார். எனவே, டிஎஸ்​பியை சிறை​யில் அடைக்​கும்​படி பிறப்​பித்த உத்​தரவை ரத்து செய்ய வேண்​டும்” என, வாதிட்​டார்.

அதே​போல், காவலர் லோகேஷ் தரப்​பி்ல் ஆஜரான வழக்​கறிஞர் சரத்​சந்​திரன், ” லோகேஷ் மற்​றும் அவரது மாம​னார் உள்​ளி்ட்​டோரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து மாவட்ட நீதிபதி உத்​தர​விட்டு இருப்​பது சட்​ட​விரோத​மானது என்​ப​தால் அதை​யும் ரத்து செய்ய வேண்​டும், எனக் கோரி​னார். இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி என். சதீஷ்கு​மார் பிறப்​பித்​துள்ள உத்​தர​வில், ‘‘இந்த வழக்​கில் காஞ்​சிபுரம் டிஎஸ்பி சங்​கர் கணேஷை சிறை​யில் அடைக்க மாவட்ட நீதிபதி உத்​தரவு பிறப்​பித்து இருப்​பது அசா​தா​ரண​மானது.

இவ்​வாறு அவர் உத்​தர​விடும் முன்​பாக நிர்​வாக ரீதி​யாக முன்​அனு​மதி பெற வேண்​டும். இந்த நடை​முறையை மாவட்ட நீதிபதி பின்​பற்​ற​வில்​லை. மேலும், முன்​விரோதம் காரண​மாகவே காவலர் லோகேஷ் மற்​றும் அவரது மாமா சிவக்​கு​மாரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து மாவட்ட நீதிபதி உத்​தர​விட்​டுள்​ள​தாக வாதிடப்​பட்​டுள்​ளது.

விசாரணை தள்ளிவைப்பு: எனவே, டிஎஸ்​பியை சிறை​யில் அடைக்க உத்​தர​விட்​டது, லோகேஷ் மற்​றும் அவரது குடும்​பத்​தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்​தது என காஞ்​சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பிறப்​பித்த இந்த இரு உத்​தர​வு​களை​யும் ரத்து செய்​கிறேன்.

விசா​ரணை அதி​காரி​யான டிஎஸ்​பியை உடனடி​யாக விடுவிக்க வேண்​டும். இந்த விவ​காரத்​தில் நடந்​தது என்ன என்​பது குறித்து உயர் நீதி​மன்ற விஜிலென்ஸ் பதி​வாளர் முழு​மை​யாக விசா​ரணை நடத்தி அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும்’’ என உத்​தர​விட்​டு, விசா​ரணையை வரும் செப்​.23-க்கு தள்ளி வைத்​துள்​ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *