காஞ்சிபுரம் மாவட்டம், சின்ன வெண்மணி பீமேஸ்வரர் திருக்கோயில்: பலம் தரும் ராகு – கேது பரிகாரத் தலம்! | chinnavenmani bhimeshwar temple

Spread the love

கருவறையில் கிழக்கு நோக்கி அருள்கிறார் பீமேஸ்வரர்; அவரின் சந்நிதிக்கு இடப்புறத்தில் அம்பிகை ஆனந்தவள்ளி சந்நிதி கொண்டு அருள்கிறாள். அம்பிகையின் சந்நிதிக்கு அருகிலேயே குபேர லிங்கம் அமைந்திருப்பது, மிகவும் விசேஷம். இந்த லிங்கத்துக்குள் முனிவர் ஒருவர் ஐக்கியமானதாகவும் சொல்லப்படுகிறது. இங்கே வழிபடும்போது நேர்மறை அதிர்வுகள் நமக்குள் எழுவதைக் கொண்டு நம்மாலும் உணர முடியும்.

பிராகாரத்தில் விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர், ஐயப்பன், கஜலட்சுமி சந்நிதிகள் அமைந்துள்ளன. ஒரு சிறு மண்டபத்தில் நவகிரகங்கள் வித்தியாசமாகக் காட்சி தருகின்றனர். சூரியன் மேற்கு நோக்கி அருள்பாலிக்க, குரு, ராகு தெற்கிலும்; சுக்கிரனும் புதனும் மேற்கிலும்; சந்திரன், சனீஸ்வரர் கிழக்கிலும்; செவ்வாயும் கேதுவும் வடக்கிலும் இருக்கும்படி நவகிரக சந்நிதி வேறு எங்கும் காணமுடியாத சிறப்பு.

சின்ன வெண்மணி பீமேஸ்வரர் கோயில் அம்பிகை

சின்ன வெண்மணி பீமேஸ்வரர் கோயில் அம்பிகை

கருவறை மண்டப விதானத்தில் மீன் சின்னங்களும், சூரியனைப் பாம்பு விழுங்குவது போன்ற சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளன. அம்பாளின் சந்நிதியிலும் சந்திரனைப் பாம்பு விழுங்குவது போன்ற சின்னம் காணப்படுகிறது. இத்தலம் ராகு – கேது தோஷம் தீர்க்கும் மிகச் சிறந்த பரிகாரத் தலம் ஆகும். மேலும், கிரகண காலத்தில் ஏற்படும் தோஷங்களைப் போக்கும் தலமாகவும் விளங்குகிறது என்பதையே மேலே குறிப்பிட்ட சின்னங்கள் விளக்குகின்றன.

பொதுவாக பீமன் வழிபட்ட ஈசனை வணங்கினால் ஆரோக்கியம் பெருகும் என்பது நம்பிக்கை. பீமன் சிவ வழிபாடு செய்துதான் பெரும் பலம் பெற்றான் என்பார்கள். அப்படிப்பட்ட பீமன் வழிபாடு செய்த ஈசனை வணங்கும்போது நோய்நொடிகள் நீங்கி உடலில் ஆரோக்கியம் மேம்படும். வாழ்விலும் வெற்றி உண்டாகும் என்பது நம்பிக்கை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *