இக்குடியிருப்பைச் சோ்ந்த 2 பழங்குடியின குடும்பத்தினா், அதிரப்பள்ளி வனப் பகுதியில் நீா்வீழ்ச்சிக்கு அருகே உயரமான பாறை மீது தற்காலிக கூடாரங்கள் அமைத்து, தேன் உள்ளிட்ட வனப் பொருள்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். கடந்த திங்கள்கிழமை இரவில் இவா்களை காட்டு யானைகள் கூட்டம் தாக்கியுள்ளது. இதில் இருவா் உயிரிழந்தனா். அவா்களின் உடல்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டு, கூறாய்வுக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.
காட்டு யானைகள் தாக்கி பழங்குடியினா் இருவா் உயிரிழப்பு
