காதலனை எரித்து கொன்ற காதலியும் சாவு

Love Fire(2)
Spread the love

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆகாஷ்(வயது24). பூம்புகார் கல்லூரியில் பி.காம்., 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரும் மயிலாடுதுறை அரசினர் மகளிர் கல்லூரியில் படித்து வந்த சிந்துஜாவும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் காதலி இருக்கும்போதே ஆகாஷ் மற்றொரு பெண்ணிடமும் அவர் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் சிந்துஜாவுக்கு தெரிந்ததால் இருவருக்கும் இடையே பிரச்னை உருவானது.

தகராறு

இந்தநிலையில் கடந்த 9&ந்தேதி மாலை ஆகாசை சந்திக்க சிந்துஜா அழைத்தார். பின்னர் இருவரும் ஜோடியாக பூம்புகார் கடற்கரைக்கு சென்றுவிட்டு மயிலாடுதுறை திரும்பி வந்தனர். அப்போது ஆகாசிடம் அவர் பழகி வரும் பெண் குறித்து சிந்துஜா கேட்டு கண்டித்து உள்ளார். ஆனால் அவர் வேறு பெண்ணிடம் பழகவில்லை என்று கூறி இருக்கிறார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சிந்துஜா தான் பாட்டிலில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை திடீரென காதலன் ஆகாஷ் மீதுஊற்றி தீவைத்தார். அப்போது சிந்துஜா மீதும் தீப்பற்றியது. இதில் உடல் கருகிற 2 பேரையும் மீட்டு ஆகாஷ் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், சிந்துஜா தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

காதலன்-காதலி சாவு

அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 14ந்தேதி ஆகாஷ் பரிதாபமாக இறந்தார். சிந்துஜாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிந்துஜாவும் இன்று (21ந்தேதி)மாலை சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
சிந்துஜா பெட்ரோலை காதலன் மூலமே வாங்கி வைத்து இருந்தார்.வீட்டுக்கு தேவைப்படுவதாக சிந்துஜா கூறியதால் காதலன் ஆகாஷ் ஒரு பாட்டிலில் பெட்ரோல் வாங்கி கொடுத்து உள்ளார்.

பெட்ரோல்

மோட்டார் சைக்கிளில் இருவரும் சேர்ந்து வந்து கொண்டு இருந்த போது மற்றொரு பெண்ணுடன் உளட்ள தொடர்பு குறித்து கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிந்துஜா காதலன் மீது தீவைத்து எரித்து உள்ளார். தற்போது இருவரும் அந்த தீக்கு பலியாகி விட்டனர். காதலர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இருவரது வாழ்க்கையும் தொடங்குவதற்கு முன்பே கருகி போனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *