ராஜஸ்தான் மாநிலத்தில் மாடலாக இருந்த நேகா(34) என்ற பெண்ணுக்கு டேட்டிங் செயலி மூலம் துஷ்யந்த் சர்மா என்பவருடன் 2018ம் ஆண்டு தொடர்பு ஏற்பட்டது. நேகாவிற்கு ஏற்கனவே திக்ஷந்த் கம்ரா என்ற காதலன் இருந்தார். அக்காதலன் கடன் தொல்லையில் இருந்தார். அக்கடனை அடைக்க நேகா டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமான காதலன் சர்மாவை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டார்.
இதற்காக சர்மாவை, நேகா ஆல்வார் நகரில் உள்ள தனது வீட்டிற்கு வரும்படி கேட்டுக்கொண்டார். அங்கு வந்தவுடன் சர்மாவிடம் 10 லட்சம் கொடுக்கும்படி நேகா கேட்டார். சர்மா ரூ.3 லட்சத்தை ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டார்.
ஆனால் சர்மாவை வெளியில் விட்டால் போலீஸில் சென்று சொல்லிவிடுவார் என்று பயந்து நேகாவும், அவரது காதலனும் நினைத்தனர்.
இதையடுத்து நேகாவும், அவரது காதலனும், மற்றொருவரும் சேர்ந்து சர்மாவை கொலை செய்தனர். கொலை செய்யப்பட்ட சர்மாவை யாரும் அடையாளம் காணக்கூடாது என்பதற்காக அவரது முகத்தில் ஏராளமான கத்திக்குத்து காயங்களை ஏற்படுத்தினர்.
பின்னர் உடலை சூட்கேஸ் ஒன்றில் அடைத்து மலையில் தூக்கிப்போட்டனர். சர்மாவின் உடலை மீட்ட போலீஸார் நேகா உட்பட மூன்றுபேரையும் கைது செய்தனர். அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நேகா சூட்கேஸ் கொலையாளி என்று பெரிதும் பேசப்பட்டது.
காதலி உட்பட 5 பேர் படுகொலை
இதேபோன்று ஆல்வார் நகரை சேர்ந்த ஹனுமான் என்பவர் சந்தோஷி என்ற பெண்ணை காதலித்து வந்தார். ஹனுமானை விட சந்தோஷிக்கு 10 வயது அதிகம். சந்தோஷிக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருந்தன. சந்தோஷி ஒரு விளையாட்டு வீராங்கனையாவார். அவர்களது காதலுக்கு கணவன் இடையூராக இருந்தார். இதையடுத்து தனது கணவனை கொலை செய்ய முடிவு செய்த சந்தோஷி இதற்காக ஹனுமானுக்கு அழைப்பு விடுத்தார். ஹனுமான் தனது நண்பர்களுடன் வந்து சந்தோஷியின் கணவர் பன்வரிலால் என்பவரை கொலை செய்தார்.
ஆனால் சந்தோஷின் 3 பிள்ளைகள் மற்றும் வீட்டில் இருந்த ஒரு உறவினர் விழித்துவிட்டனர். அவர்கள் கொலையை பார்த்துவிட்டனர்.