சக்ஷாமின் உடலை அவரது வீட்டில் பெற்றோர் இறுதிச்சடங்கிற்காகத் தயார் செய்து கொண்டிருந்தனர். அந்நேரத்தில் அச்சல் திடீரென அங்கு வந்தார். அவர் தனது காதலன் உடல் முன்பு மஞ்சளை எடுத்து பூசிக் கொண்டார். அதோடு குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டார்.
இறந்த காதலனைத் திருமணம் செய்யப் போவதாக தெரிவித்தார். “என் காதலன் இறந்துவிட்டாலும் எங்களது காதல் இன்னும் சாகவில்லை; எனவே நான் அவரைத் திருமணம் செய்கிறேன்” என்று கூறினார். இதை கேட்டு உறவினர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
மேலும், இறந்த காதலனை திருமணம் செய்து கொண்ட அச்சல், “இனி இதுதான் எனது வீடு. வாழ்நாள் முழுவதும் இங்குதான் இருப்பேன். என் பெற்றோர் வீட்டிற்கு செல்ல மாட்டேன். என் காதலன் இறந்த பிறகே எங்கள் காதல் வெற்றி பெற்றது; ஆனால் என் தந்தையும் சகோதரர்களும் தோற்றுவிட்டனர்” என்று கூறினார். அதோடு தனது காதலனை கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
போலீஸார் இக்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து, 6 பேரை கைது செய்துள்ளனர்.