கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது நீண்ட நாள் காதலன் பலாஷ் முச்சல் என்பவரை மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலியில் திருமணம் செய்து கொள்ள இருந்தார். இருவருக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி இருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடக்க இருந்த திருமணம் திடீரென நின்று போனது.
ஸ்மிருதியின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால்தான் இத்திருமணம் நின்றுபோனதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் ஸ்மிருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திருமணம் தொடர்பான அனைத்து பதிவுகளையும் நீக்கியுள்ளார். அவரது திருமண முன்மொழிவு வீடியோ, நிச்சயதார்த்த புகைப்படங்கள் மற்றும் சங்கீத் படங்கள் என அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன.
இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உண்மையில் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால்தான் திருமணம் நின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் பலரும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். வட இந்திய ஊடகங்களும் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறது. எனினும் சம்பந்தபட்டவர்கள் கூறினால் தான் எது உண்மை என்பது தெரிய வரும்.
மந்தனா இன்ஸ்டாகிராமில் இருந்து திருமணம் தொடர்பான அனைத்து பதிவுகளையும் நீக்கியவுடன், நெட்டிசன்கள் இது குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளனர். ஒரு பதிவில், “ஏதோ பெரிய விஷயம் நடந்திருந்தால் தவிர, இதை அவர் நீக்கி இருக்க முடியாது” என்று கூறினார்.
உண்மையில் பலாஷ் தனது காதலி மந்தனாவை ஏமாற்றியதாக சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தி பரவி இருக்கிறது. திருமண வேலைகளை செய்து கொண்டிருந்த பெண் நடன இயக்குனருடன் பலாஷிற்கு தொடர்பு இருப்பதாக சில பதிவுகள் கூறுகிறது. மேலும் பலாஷ் அப்பெண்ணுடன் சாட்டிங் செய்த விபரமும் சமூக வலைத்தள பக்கத்தில் பரவி வருகிறது. அது உண்மையாதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அது உண்மையாக இருந்தாலும், அவர்கள் எப்போது இது போன்ற சாட்டிங்கில் ஈடுபட்டனர் என்ற தகவல்களும் உறுதி செய்யப்படவில்லை. திருமணத்திற்கு முந்தைய நாள் இந்த சாட்டிங் விபரம் வெளியில் கசிந்து இருக்கிறது என்பது கவனிக்கதக்கது.