காதலர் தினமான பிப்ரவரி 14, சினிமா ரசிகர்களுக்கு ரொம்பவே கொண்டாட்டமான நாளாக மலர்கிறது. ஒரு நாள் முன்னதாக, பிப்ரவரி 13ல் அரை டஜன் நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகிறது. அதற்கு சவால் விடும் வகையில் ரீ ரிலீஸ் படங்கள் நான்கு களத்தில் குதிக்கிறது. வரும் வெள்ளியன்று காதலை மையப்படுத்தி திரைக்கு வரும் படங்களின் ஷார்ட் அண்ட் ஸ்வீட் பார்வை இது.

தமிழ் சினிமாவின் என்பது, தொண்ணூறு காலகட்டங்கள் காதலுக்கு வசந்தகாலம் எனலாம். “16 வயதினிலேயே’, ‘மூன்றாம் பிறை’, ‘மௌனராகம்’, ‘இதயம்’, ‘காதலன்’, ‘வண்ண வண்ண பூக்கள்’, ‘குணா’, ‘அலைபாயுதே’, ‘ஆட்டோகிராஃப்’, ‘அழகி’, ‘காதல் கோட்டை’, ‘கோகுலத்தில் சீதை’, ‘இதயம்’, ‘காதலர் தினம்’ என காதல் படங்கள் வரிசை கட்டி வெளியாகி வரவேற்பை அள்ளியது.
ஆனால், கொரோனாவிற்கு பிறகு ஆக்ஷன், த்ரில்லர், ஹாரர் ஜானர்களுக்கு மக்கள் தாவியதில், காதல் படங்களின் வரத்து குறைந்தன. இந்தாண்டு காதல் சீஸன் மீண்டும் துளிர்ந்திருக்கிறது போல.
‘மை லார்டு’, ‘மைலாஞ்சி’, ‘பூக்கி’, ‘கா’, ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’, ‘ட்ரீம் கேர்ள்’ தவிர, ‘மௌனம் பேசியதே’, ‘மின்னலே’, ‘காதலர் தினம்’, ‘உயிருள்ளவரை உஷா’ ஆகிய ரீ ரிலீஸ் படங்களும் திரைக்கு வருகின்றன.