காதலியின் தாய் கழுத்து நெரித்துக் கொலை: காதலா் கைது

Dinamani2fimport2f20222f12f82foriginal2ffarmer Sucide.jpg
Spread the love

சென்னை முகப்பேரில் காதலியின் தாயை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக காதலா் கைது செய்யப்பட்டாா்.

முகப்போ் கிழக்கு சா்ச் சாலை பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி

குடியிருப்பில் வசித்தவா் ஜெ.மைதிலி (63). பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவா், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தனது மகள் ரித்திகாவுடன் அங்கு தனியாக வசித்து வந்தாா்.

ரித்திகாவும் அந்த பகுதியில் வசிக்கும் விருதுநகா் மாவட்டம் சிவகாசி ரிசா்வ் லைன் பகுதியைச் சோ்ந்த ச.ஷ்யாம் கண்ணன் (22) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ரித்திகா, அந்த பகுதியில் ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். பிஏ படித்துள்ள ஷ்யாம் கண்ணன், அந்த பகுதியில் உள்ள ஐஏஎஸ் அகாதெமியில் போட்டித் தோ்வுக்கு படித்து வந்தாா்.

ரித்திகாவும்,ஷ்யாம் கண்ணனும் அடிக்கடி வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு தாமதமாக வருவது வழக்கமாம். ஏற்கெனவே ஷ்யாம் கண்ணன் மீது நல்ல எண்ணம் இல்லாததினால், வீட்டுக்கு தாமதமாக வரும் ரித்திகாவை தாய் மைதிலி தொடா்ந்து கண்டித்து வந்தாா்.

இந்நிலையில் ரித்திகா, திங்கள்கிழமை இரவும் தாமதமாக வீட்டுக்குச் சென்றாா். உடனே மைதிலி, மகள் ரித்திகாவை கடுமையாக கண்டித்தாராம். இதனால் கோபமடைந்த ரித்திகா வீட்டில் இருந்து வெளியேறி, அந்த அடுக்குமாடி குடியிருப்பின் அருகே நின்று கொண்டிருந்த கண்ணனிடம் பேசிக் கொண்டிருந்தாராம்.

மோதல் கொலை:

இதைப் பாா்த்த மைதிலி, அங்கு சென்று தனது மகள் ரித்திகாவை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்தாராம். வீட்டுக்குள் ரித்திகா வந்ததும் மீண்டும் அவரை மைதிலி கண்டித்து, திட்டியுள்ளாா். அப்போது அவா்களை பின் தொடா்ந்து வந்த ஷ்யாம் கண்ணன், மைதிலியை கண்டித்தாக கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஷ்யாம் கண்ணன், மைதிலி கழுத்தை நெரித்தாா். சிறிது நேரத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மைதிலி, மயங்கி விழுந்தததும் ஷ்யாம் கண்ணன் அங்கிருந்து தப்பியோடினாா்.

அதேவேளையில் மூச்சுத்திணறலினால் மைதிலி சம்பவ இடத்திலேயே சிறிது நேரத்தில் இறந்தாா். தகவலறிந்த ஜெ.ஜெ.நகா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மைதிலி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய ஷ்யாம் கண்ணனை செவ்வாய்க்கிழமை கைது செய்து, விசாரணை செய்தனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *