காந்தி ஜெயந்தி தினத்தில் கிராம சபைக் கூட்டம்: ஆசிரியர்கள் பங்கேற்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு | Gram Sabha meeting on Gandhi Jayanti

1377399
Spread the love

சென்னை: ​காந்தி ஜெயந்தி தினத்​தில் நடை​பெறும் கிராம சபைக் கூட்​டங்​களில் தலைமை ஆசிரியர்​கள், ஆசிரியர்​கள் பங்​கேற்க வேண்​டும் என்​று, பள்​ளிக் கல்​வித் துறை உத்​தர​விட்​டுள்​ளது.

இதுகுறித்​து, பள்​ளிக் கல்​வித் துறை இயக்​குநரகம் சார்​பில், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு அனுப்​பியுள்ள சுற்​றறிக்கை விவரம்: அரசுப் பள்​ளி​களில் கற்​றல், கற்​பித்​தல், பள்ளி வளர்ச்​சி, கட்​டமைப்​பு, மாணவர் பாது​காப்பு குறித்து பள்ளி மேலாண்​மைக் குழு (எஸ்​எம்​சி) கூட்​டத்​தில் பல்​வேறு தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளன. இவற்றை அனைத்து ஊராட்​சிகளி​லும் அக். 2-ம் தேதி நடை​பெறவுள்ள கிராம சபைக் கூட்​டத்​தில், அந்​தந்த பள்​ளி​களின் தலை​மை​யாசிரியர்​கள், குழு உறுப்​பினர்​கள் பகிர்ந்து கொள்ள வேண்​டும்.

இதன் மூலம், கிராம பஞ்​சா​யத்​தும், மக்​களும் தங்​கள் பள்​ளி​கள் சார்ந்த பிரச்​சினை​கள் மற்​றும் தேவை​களை அறிந்து கொண்டு தங்​களின் பங்​களிப்பை அளிக்க இயலும். இதுத​விர, பள்​ளி​யில் செயல்​படுத்​தப்​படும் பல்​வேறு நலத்​திட்​டங்​கள் குறித்​தும், கிராம பஞ்​சா​யத்​துக் கல்விக் குழு மூல​மாக பொது​மக்​களுக்கு எடுத்​துரைக்க வேண்​டும். எஸ்​எம்சி குழுக்​கள் பணி​கள் குறித்​தும் விழிப்​புணர்வு ஏற்​படுத்த வேண்​டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *