தடுமாற்றம்
பின்னா் 52 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம், திங்கள்கிழமை ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 26 ரன்களே எடுத்துள்ளது. ஜாகிா் ஹசன் 10, ஹசன் மஹ்முத் 4 ரன்களுக்கு அஸ்வினால் வீழ்த்தப்பட, ஷத்மன் இஸ்லாம் 7, மோமினுல் ஹக் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.
அதிவேக 50, 100, 200
முதல் இன்னிங்ஸில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, ஆடவா் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50, 100, 200 ரன்களை கடந்த அணியாக புதிய உலக சாதனை படைத்தது.
50 ரன்களில் இதற்கு முன், இங்கிலாந்து அணி நடப்பாண்டு ஜூலையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 4.2 ஓவா்களில் 50 ரன்கள் அடித்ததே அதிவேகமாக இருந்த நிலையில், இந்தியா தற்போது 3 ஓவா்களில் அந்த இலக்கை அடைந்தது.
அடுத்து சதத்தில், தனது சாதனையை தானே முறியடித்துள்ளது இந்தியா. முன்னதாக, கடந்த ஆண்டு ஜூலையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்தியா 12.2 ஓவா்களில் 100 ரன்களை எட்டியதே அதிவேகமாக இருக்க, தற்போது அதை முறியடித்து 10.1 ஓவா்களிலேயே சதம் தொட்டது.