தொடரும் சோகம் குறித்து தெரிவித்த புலிகள் பாதுகாப்பு செயற்பாட்டாளர்கள், ” கர்நாடகாவில் கடந்த ஜூன் மாதம் முதல் டிசம்பர் வரை மொத்தம் 14 புலிகள் இயற்கைக்கு மாறான முறையில் இறந்துள்ளன.

இதில் வேதனை என்னவென்றால் தாயிடமிருந்து கர்நாடக வனத்துறையால் பிரிக்கப்பட்ட 7 புலிக்குட்டிகள் பசிக்கொடுமை, வைரஸ் தொற்று, தாயைப் பிரிந்ததால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி இழப்பு போன்ற காரணங்களால் இறந்திருப்பதுதான். புலிகள் பாதுகாப்பில் தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன முறைகளை பின்பற்ற வேண்டும். வாழிடப் பாதுகாப்பு மிக முக்கியமானது” என்றனர்.