3. முதலீடு
இந்திய குடும்பங்களுக்கு சேமிப்பு குறித்து சொல்லித்தர வேண்டியதில்லை. ஆனால், நாம் சேமிப்பில் இருந்து முதலீட்டிற்கு கட்டாயம் ஸ்டெப் அப் செய்ய வேண்டும்.
பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டுமென்பதில்லை. குறைந்தபட்சம் ரூ.500-ல் இருந்து எஸ்.ஐ.பியை தொடங்குங்கள். இது பழக்கமாக மாறும்போது, பின்னர், உங்கள் முதலீடுகளும், முதலீட்டுத் தொகைகளும் அதிகரிக்கும்.
உதாரணத்திற்கு, நீங்கள் இந்த மாதத்தில் இருந்து ரூ.1,000 எஸ்.ஐ.பி முறையில் முதலீடு தொடங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அடுத்த 25 ஆண்டுகளில், ரூ.3 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள். உங்களுடைய முதலீடு ரூ.12,43,160 ஆக மாறியிருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும், இந்த ஸ்டெப் அப்பை அதிகரித்தால், இன்னமும் உங்களுடைய முதலீட்டுத் தொகை அதிகரிக்கும்.
ஏற்கெனவே முதலீடு செய்திருப்பவர்கள், ஒவ்வொரு ஆண்டும் ஸ்டெப் அப் செய்வதை உறுதிப்படுத்துங்கள்.

4. செலவு
இன்று பலருக்கும் சேமிக்க முடியாமலும், முதலீடு செய்ய முடியாமல் போவதற்கும் முக்கிய காரணம் செலவுகள். தேவையில்லாத செலவுகளைக் குறையுங்கள். குறைந்தபட்சம் 10 நாள்களுக்கு ஒருமுறை “நோ ஸ்பெண்ட் டே’வை செட் செய்யுங்கள். அன்று நீங்கள் தேவையில்லாத எந்தச் செலவுகளையும் செய்யக்கூடாது.
ஆடம்பரத்தையும், பொழுதுபோக்குகளையும் முற்றிலும் தவிருங்கள் என்று கூறவில்லை. முடிந்தளவு குறையுங்கள். இந்தப் பழக்கமே உங்களை பெருமளவு செலவுகளைக் குறைக்கும் வழிக்கு கூட்டிச் செல்லும்.