தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவையில் தனி முத்திரை பதித்தவர் நடிகர் வெங்கல்ராவ். இவர், நடிகர் வடிவேலுவுடன் சேர்ந்து நடித்த பல காமெடி காட்சிகள் இன்றும் பிரபலம்.
பலரை சிரிக்க வைத்த நடிகர் வெங்கல்ராவ் தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்து வருகிறார். அவரது ஒரு கை, ஒரு கால் செயல் இழந்து, தனது சொந்த ஊரான விஜயவாடாவில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்.
வீடியோ
இதையடுத்து நடிகர் வெங்கல்ராவ் திரைஉலகினர் தனக்கு உதவி செய்யக்கோரி வேண்டுகோள்விடுத்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.
அந்த வீடியோவில் வெங்கல்ராவ் பரிதாபமான நிலையில் கட்டிலில் வேஷ்டி மட்டு அணிந்து இருக்கிறார். அவர் பேசும்போது, எனக்கு ஒருகை, கால் சரியாக செயல்படவில்லை, ஆஸ்பத்திரி, மருந்து வாங்க கூட பணம் இல்லை. யாராவது உதவி செய்யுங்கள்… என்னால் அதிகம் பேச முடியவில்லை… என்று கூறுகிறார்.
பல நகைச்சுவை கதாபாத்திரங்கள் மூலம் மக்களை சிரிக்க வைத்த நடிகர் வெங்கல்ராவ் ஒரு கை கால் செயல்படமுடியால், வாய் பேச முடியாமல் இருக்கும் அவரது இன்றைய நிலை காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
வடிவேலு உதவ முன்வருவாரா
நடிகர் வடிவேலுவுடன் 30க்கும் மேற்பட்ட படங்களில் பல காமெடி சீன்களில் தோன்றி மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் வெங்கல்ராவ் ஆரம்பத்தில் ஸ்டண்ட் கலைஞராக தனது பயணத்தை தொடங்கினார். பல முன்னணி நடிகர்களுக்கு டூப் போட்டுள்ளார். அதன் பின் ஒரு முறை ஸ்டண்ட் காட்சியின் போது இவருக்கு ஏற்பட்ட எலும்புமுறிவின் காரணமாக ஸ்டண்ட் செய்வதை நிறுத்திவிட்டு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதில் கவனம் செலுத்த தொடங்கினார்.
இந்தியன்-2 பிரம்மாண்ட ட்ரெய்லர் வெளியானது! “ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது”
இந்த நிலையில், நடிகர் வெங்கல்ராவ், ஒரு கை, ஒரு கால் செயல் இழந்து கஷ்டப்படுவது அனைவரையும் கண்கலங்க வைத்து உள்ளது. மேலும் திரைத்துறையினர் அவருக்கு உதவி கரம் நீட்டுவார்களா? பல படங்களில் ஒன்றாக நடித்த நடிகர் வடிவேலு வெங்கல்ராவுக்கு உதவ முன்வருவாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது.
இதையும் படியுங்கள்: