காமேனி மரணத்தில் இந்தியா மௌனம் காப்பது ஏன்?| Why is India maintaining silence over Khamenei’s death?

Spread the love

இந்தியாவின் இந்த மௌனத்திற்கு காரணம் என்ன? 

* 2017 முதல் 2024 வரை, காமேனி பலமுறை இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில், அதாவது காஷ்மீர் விவகாரம், CAA சட்டம், டெல்லி கலவரம் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். 

இது இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது என இந்திய வெளியுறவு அமைச்சகம் பலமுறை கண்டனமும் தெரிவித்திருந்தது. இது  இந்தியாவின்  மௌனத்திற்கு  முக்கியமான  காரணங்களுள் ஒன்று எனக் கூறப்படுகிறது. 

* மேலும் இந்தியாவுக்கு நெருக்கமான ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் ஈரான் மீது அதிருப்தியில் உள்ளன. குறிப்பாக அமீரகம் மீதான ஈரானின் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா தனது நட்பு நாடுகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு செயல்படுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

* தவிர அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக, இந்தியா ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை வெகுவாகக் குறைத்து தற்போது வளைகுடா நாடுகளையே அதிகம் சார்ந்திருக்கிறது.

இதனால் ஈரானுடனான பொருளாதாரத் தேவை முன்பை விடக் குறைந்துவிட்டது. இதுவும் இந்தியா  மௌனமாக இருக்க ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *