காமேனி மரணம்: 36 ஆண்டு ஆட்சி முடிவு, ஈரான் இரு முகம்|Khamenei Dead: Grief and Celebration Rock Iran

Spread the love

அயதுல்லா அலி கமேனி – ஈரானில் கிட்டத்தட்ட 36 ஆண்டுகள் உச்சத் தலைவராக இருந்தவர். தற்போது ஈரானில் நடந்து வரும் போரில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் செய்தியைக் கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) அமெரிக்க அதிபர் ட்ரம்பும், அடுத்த நாளான நேற்று (மார்ச் 1) ஈரானின் அதிகாரபூர்வமான செய்தி நிறுவனமான IRIB (Islamic Republic of Iran Broadcasting)-உம் உறுதி செய்தனர்.

இவரின் இறப்பை ஈரான் இரண்டு வகைகளில் எதிர்கொண்டது. ஒன்று, சோகம்… அழுகை… கோபம்.

மற்றொன்று, சிரிப்பு… மகிழ்ச்சி… கொண்டாட்டம்.

கமேனி மரணம் - துக்கம்

கமேனி மரணம் – துக்கம்

முதல் வகைக்கான காரணத்தைப் பார்க்கலாம்…

கமேனி என்பவர் ஈரானைப் பொறுத்தவரை, “எல்லாமுமானவர்’. அப்படிப்பட்டவரின் இறப்பு அந்த நாட்டை எப்படி உலுக்கி இருக்கும் என்பது நமக்கே எளிதாகப் புரியும்.

தங்களுடைய தலைவர் இரு நாடுகளுக்கு இடையிலான தாக்குதலில் உயிரிழந்துள்ளார் என்பதை ஈரானில் இருக்கும் சில… பல… மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதன் விளைவுதான், இஸ்ரேல் மீதும், அமெரிக்கப் படைகள் அமைந்துள்ள மத்தியக் கிழக்கு நாடுகள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலுக்கான காரணம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *