கார்த்திகை தீபம் தொடரில் இணையும் கீர்த்தனா!

Spread the love

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் கார்த்திகை தீபம் தொடரில் நடிகை கீர்த்தனா பொதுவல் இணையவுள்ளார்.

நினைத்தேன் வந்தாய் தொடரில் நடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்த கீர்த்தனா, தற்போது கார்த்திகை தீபம் தொடரில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கார்த்திகை தீபம் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

கார்த்திக் ராஜு நாயகனாகவும், ரேவதி நாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் அழுத்தமான துணை கதாபாத்திரங்களும் நடிக்கின்றனர். ராஜேஷ், தமிழ்ச்செல்வி, மீரா கிருஷ்ணா, ஜனனி, விசித்ரா, விஜே ரேஷ்மா, ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோரின் நடிப்பு பெரும் பலமாக உள்ளது.

நகரத்தை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வந்த இந்தத் தொடர், தற்போது கிராமத்துப் பின்னணியை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.

இந்தத் தொடரில் தற்போது கீர்த்தனா பொதுவலும் இணைந்துள்ளார். இவரின் வருகையால் கார்த்திகை தீபம் தொடரில் பல முக்கிய திருப்பங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

திருமதி ஹிட்லர் தொடரில் கவனம் பெற்ற கீர்த்தனா, நினைத்தேன் வந்தாய் தொடரில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். தற்போது கார்த்திகை தீபம் தொடரில் இவரின் நடிப்புக்காக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் படிக்க | ஸ்ரீமத் ராமாயணம் தொடரின் குழந்தை நட்சத்திரம் பலி!

Actress Keerthana Podhuval act in Karthigai Deepam

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *