பெரும் போராட்டத்திற்குப் பிறகு இடைவேளையில் கதையை எட்டிப் பிடிக்கிறது திரைக்கதை. நிதானமாக இடைவேளை ட்விஸ்ட்டை விவரிக்கும் விதமும் அதற்கான திரையாக்கமும் நச்!
இரண்டாம் பாதியில், ஆக்ஷன், சமூகக் கருத்து எனக் கமெர்சியல் மீட்டரை ஏறி மிதிக்கிறது திரைக்கதை. இரண்டாம் பாதிக்கான ஐடியாவைத் தொடக்கத்தில் சுவாரஸ்யமாக நகர்த்துகிறது திரைக்கதை.
மாறி, மாறி பேசும் கார்த்தி, தண்ணீர்த் தொட்டி ஐடியா போன்றவை ரசிக்க வைக்கின்றன. எம்.ஜி.ஆரை, கார்த்தி கதாபாத்திரத்தோடு இணைத்த விதம் அட! ஆனால், சிறிது நேரத்திலேயே வழக்கமான ஹீரோயிஸ பாதையில் குதிரை ஓட்டத் தொடங்குகிறது திரைக்கதை.
லாஜிக் மீறல்கள், பயமுறுத்தாத வில்லன், முழுமையில்லாத கதாநாயகி கதாபாத்திரம், சோதனை மேல் சோதனையாக இழுக்கும் காதல் அத்தியாயம் எனச் சுவாரஸ்யத்தைச் சிதறவிட்டபடியே செல்கிறது படம்.

ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆரைப் பற்றிய படமா இல்லை எம்.ஜி.ஆர் காலப் படமா என எண்ண வைக்கிறது திரைக்கதை! பரபரவென முடியும் இறுதிக்காட்சியிலும் எமோஷனோ, சுவாரஸ்யமோ கூடி வரவில்லை.
கதையின் ஐடியாவும், கார்த்தியின் நடிப்பும் சுவாரஸ்ய சாட்டையைச் சுழற்றினாலும், திரைக்கதையில் இன்னும் கச்சிதத்தையும் புதுமையையும் சேர்த்திருந்தால், ரத்தத்தின் ரத்தமாக இன்னும் உற்சாகத்தோடு ‘வா வாத்தியாரை’ வரவேற்றிருக்கலாம்.