பிகாரில் கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
பிகாரின் பாங்கா மாவட்டத்தில் வேகமாக வந்த எஸ்யூவி ரகக் கார் ஒன்று, வெள்ளிக்கிழமை (அக். 18) இரவு 8.30 மணியளவில் பாதசாரிகளின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இருப்பினும், சம்பவ இடத்திலிருந்து கார் ஓட்டுநர் தப்பியோடி விட்டார்.
கார் மோதியதில், நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; மேலும் இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களும் சிகிச்சை பலனின்றி இன்று (அக். 19) உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆறுதல் தெரிவித்துள்ளார்.